பள்ளி மாணவனை, ஓரினசேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி சேவியர் பள்ளியின் கணித ஆசிரியர், பீட்டர் ஞானசெல்வம், (வயது 44), மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவரிடம் 'டியூசன்' பயிலும் 7ம் வகுப்பு மாணவனை, ஓரின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தினார். நேற்று முன்தினம் இரவு, மாணவனை மிரட்டி, 'தகாத உறவில்' ஈடுபட்டார்.
இதுகுறித்து மாணவன், பெற்றோரிடம் கூறினான். அவனது தாய் புகாரின்படி, ஆசிரியர் மீது தகாத உறவு, காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்த போலீசார், பீட்டரை கைது செய்தனர். மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.