ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் இந்தச் சுறாவின் சாகசக் குத்துக்கரணங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போவார்கள்.
360கி.கி. நிறையுள்ள இந்தச் சுறா மீனவரிடமிருந்து விடுபடுவதற்காக 9 தொடர் குத்துக்கரணங்களை அடித்திருந்தது. இவை ஒவ்வொன்றும் பல மீற்றர் இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் இந்தப் பாய்ச்சலால் அதிசயமடைந்தனர் அந்த மீனவர்கள்.
35 நிமிடப் போராட்டத்தின் இறுதியில் அதன் முயற்சி பலனளித்து அது கயிற்றை அறுத்துத் தப்பித்திருந்தது.
இப்படியானதொரு நிகழ்வைத் தான் தனது வாழ்நாளில் கண்டதேயில்லையென அம்மீனவர் தெரிவித்தார்.
சான் டியாகோவில் நடைபெற்ற வருடாந்த Flying Mako என்ற போட்டியில் மீன்கள் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்படும். இதன்போதே இந்த விளைவு இடம்பெற்றிருந்தது.
இந்த Mako வகை சுறாக்கள் வெப்பவலயப் பகுதிகளிலேயே பொதுவாகக் காணப்படும். மணிக்கு 50கி.மீ. வேகத்தில் இது பயணிக்குமென்றும் அதிவேகத்தில் 74கி.மீ. வேகத்தில் பயணிக்குமென்றும் கூறப்படுகின்றது.

